மகாலட்சுமிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் இதெல்லாம் செய்யக்கூடாது என நம்பப்படுகிறது


இதையெல்லாம் செய்யாதீங்க...


வார நாள்களில் மங்களகரமான நாளாகக் கருதப்படுவது வெள்ளிக்கிழமை. இந்த நாளில் இதையெல்லாம் செய்யலாம், இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என பல ஆண்டு காலமாகவே வரையறுத்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றைத்  தெரிந்துகொள்வோம்


நாம் வசிக்கும் வீட்டை வெள்ளிக்கிழமைகளில்  தூய்மையாகப் பேண வேண்டும்,  எவ்வளவு தூய்மையாகவும் மங்களகரமானதாகவும் வீட்டைப் பேணுகிறோமோ அந்த அளவுக்கு திருமகள் லட்சுமியின் அருள் கிட்டும் என நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை கல், உப்பு, அரிசி போன்றவற்றை வாங்கி சேர்த்து வையுங்கள். தனம் கொடுக்கும் கடவுள்களான லட்சுமி, குபேரனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் விரதம் கடைபிடித்து இந்தக் கடவுள்களை வழிபடவேண்டும் என நம்பப்படுகிறது


வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை உங்களுக்குத் தெரியாமல் இதுவரை செய்து வந்திருந்தீர்கள் என்றால், இவற்றை செய்வதை அதை நிறுத்தவேண்டும் என நம்பப்படுகிறது


எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்வதில்லை என சிலர் புலம்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள்... நீங்கள் முதலில் உங்கள் செல்வத்தை வெள்ளி தினங்களில் கொடுப்பதை நிறுத்துங்கள்.  வெள்ளிக்கிழமை செல்வத்தைக் கொடுத்தால் அது நம்மை விட்டு நிரந்தரமாக சென்று விடும் என்பது ஐதீகம்


அரிசியை வறுப்பது, புடைப்பது ஆகியவற்றைத் தவிருங்கள். தயிர், பால், மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டவற்றை இரவில் கடன் வாங்குதல், கொடுத்தல், வெள்ளிக்கிழமைகளில் கொடுத்தல், வாங்குதலைத் தவிர்க்கவேண்டும் என நம்பப்படுகிறது


பால் பொங்கி வழிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தபின் பேன் பார்ப்பது, முகம் கழுவுவது, தலை சீவுவது, குளிப்பது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது ஆகிய செயல்களைத் தவிர்க்கவேண்டும் என நம்பப்படுகிறது


வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் குப்பைகளை வெளியே கொட்டுவதைத் தவிருங்கள். வீட்டில் இருக்கும் பிறர் தூங்கும்போது இந்த நாள்களில் விளக்கேற்றக்கூடாது என நம்பப்படுகிறது


பிளாஸ்டிக் தோரணங்கள், பூக்களை பூஜைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும், வீட்டில் எவ்வளவு தான் ஒட்டடை இருந்தாலும் வெள்ளிக்கிழமை நாள்களில் ஒட்டடை அடிக்காதீர்கள். வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைத்துக் கொள்ளுங்கள். ஆண்கள் வெள்ளிக்கிழமை நாள்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது என்பதும் ஐதீகம்.


மேலும் படிக்க: வைரல் வீடியோ.. 100 அடி கம்பத்தில் ஏற்றப்பட்ட மூவர்ண கொடி...விளையாட்டு மைதானத்தில் ஏற்றி நாட்டுக்கு அர்ப்பணித்த ராணுவம்..!