Diwali 2023: 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி! ஒவ்வொரு நாளும் என்ன விசேஷம்?

Diwali 2023: தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் 5 நாட்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Continues below advertisement

தீபாவளி பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும் தீபாவளியானது வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த 5 நாட்கள் கொண்டாட்டம் பற்றி கீழே காணலாம்.

Continues below advertisement

தந்தேராஸ் (முதல் நாள்)

தீபாவளி பண்டிகையின் முதல் நாளான திரியோதசி திதியில் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தந்தேராஸ் நாளானது லட்சுமி தேவி அவதரித்த நாளாக கருதப்படுகிறது. மேலும், ஆயுர்வேத கடவுளான தன்வந்திர பகவான் அவதரித்த நாளாகவும் இந்த தந்தேராஸ் கருதப்படுகிறது. வட இந்தியாவில் தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உயர்ந்த பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். தந்தேராஸ் நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு உயரும் என்பது நம்பிக்கை ஆகும்.

சோட்டி (2வது நாள்)

தீபாவளி பண்டிகையின் 2வது நாள் சோட்டி தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளே சோட்டி தீபாவளி ஆகும். வட இந்தியாவில் இந்த நாளை நகர சதுர்த்ததி என்று அழைக்கிறார்கள். இந்த நாளில் வீட்டை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள். தீபத்தில் வீடுகள் ஒளிரும்போது இருள், தீமை விலகிடும் என்பது நம்பிக்கை ஆகும்.

தீபாவளி:( 3வது நாள்)

வட இந்தியாவில் 3வது நாளே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையில் லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த பூஜையானது மாலை நேரத்தில் செய்யப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, அன்பளிப்புகளை ஒருவருக்கு ஒருவர் வழங்குவார்கள். தீபாவளி பண்டிகை தினத்தில்தான் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம் ஆகும்.

கோவர்த்தன பூஜை: (4வது நாள்)

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் பண்டிகை கோவர்த்தன பூஜை ஆகும். கிருஷ்ண பரமாத்மாவை போற்றும் விதமாக கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில் வட இந்தியாவில் கோவர்த்தன மலையை தாங்கும் கிருஷ்ண பகவானின் உருவ படங்களை வைத்து, படையலிட்டு வழிபடுவார்கள்.

பாய் தூஜ் ( 5வது நாள்)

தீபாவளி பண்டிகையின் கடைசி நாளான இந்த 5ம் நாள் பாய் தூஜ் என்று கொண்டாடப்படுகிறது. அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola