ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி , முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவசரநிலை பிரகடனம்:
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது, "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஒரு சர்வாதிகார மனநிலையோடு, தேசத்தின் மீது அவசரநிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை கழுத்தை நெரித்தார். மேலும் ஊடகங்களின் குரலானது அடக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை அரசியல் படுகொலை தினமாக ('சம்விதான் ஹத்யா திவாஸ்') அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசர நிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.