சில பணிகளை செய்வதற்கு ஈடுபாடு என்பதை தாண்டி அன்பும் தேவைப்படும் . விலங்குகள் ஆர்வலகர்கள் , சரணாலய பராமரிப்பாளர்கள் , வனத்துறையினர் , ஆதரவற்ற விலங்குகளை பரமாரிப்பவர்கள் என பலரும் வேலை என்பதை தாண்டி , விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படியான வீடியோ ஒன்றைத்தான் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் காடுகளின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் “ இந்த காணொளியைப் பகிர்வதன் மூலம், தமிழ்நாடு வனத்துறையினர் யானைக்குட்டியை தாயுடன் இணைக்கும் முயற்சியின் போது, தூங்கிக் கொண்டிருந்த குட்டி யானைக்கு நிழல் அளித்ததைக் பார்க்க முடிகிறது. அவர்களின் கருணை, அக்கறை மற்றும் சிந்தனை முழு முயற்சியையும் பயனுள்ளதாக்கியது. “ என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ :
வீடியோவில் வனத்துறை அதிகாரி ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் யானைக்குட்டிக்கு , வெயில் அடிக்க கூடாது என்பதற்காக குடைப்பிடித்துக்கொண்டிருப்பது அவர்கள் வனவிலங்குகள் மீது கொண்ட அன்பை விளக்குவதாக இருக்கிறது.
இதேபோல மற்றுமொரு வீடியோவை பகிர்ந்த அவர் யானைக்குட்டியை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் செய்த முயற்சிக்கு சல்யூட் செய்திருக்கிறார். சேகூர் மலைத்தொடரில் ஒரு பெரும் ஆற்றை கடக்கும் பொழுது யானைக்குட்டியானது தனது யானையிடம் இருந்து பிரிந்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக 24*7 கடுமையாக உழைத்து யானைக்குட்டியை இறுதியில் தாயுடன் சேர்க்க ஆயத்தமானார்கள். அந்த வீடியோவில் இவர்கள் நம்மை அம்மாவிடம் சேர்க்கத்தான் அழைத்து செல்கிறார்கள் என்பதை உணர்ந்தது போல , அவர்களை ஃபாலோ செய்து செல்கிறது இந்த குட்டி யானை.
வீடியோ :