திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன்,  பகவதி அம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த ஆண்டு இந்த கோயில் திருவிழாவானது,  கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவில் ஒவ்வொறு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


IND vs BAN: டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா.. கோலி விளையாடுவது சந்தேகம்?




இன்று காலை முதல் முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு கோயில் முன்பாக குட்டி கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், படுகளம் போடும், நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முத்தாலம்மன் வாழ்கை, வரலாறு பாடலாகப் பாடப்பட்டது. பின்பு கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதற்காக 79  அடி உயரமுள்ள கழுகுமரம் வெட்டி கொண்டு வரப்பட்டு அவற்றின் பட்டைகள் உரிக்கப்பட்டது. பின்பு வழுக்கும் பொருட்களான எண்ணெய் வகைகள், சோற்றுக்கற்றாழை போன்ற வழுக்கும் பொருட்கள் தடவப்பட்டு கழுகுமரம் முத்தாலம்மன் கோயில் மைதானத்தில்  ஊர் பொதுமக்களால் ஊன்றப்பட்டது. பின்பு கழுகு மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி தொடங்கியது. 


Vaikasi Brahmotsavam 2024: காஞ்சியின் அடுத்த திருவிழா தொடங்கியது..! வைகுந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்..!




 கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள்  முறையாக விரதம் மேற்கொண்டு கழுகுமரம் ஏறுவர். இளைஞர்கள் சிலர் கழுகுமரத்தில் ஏற முற்பட்டபொழுது வழுக்கும் பொருட்களால் கழுகு மரத்தில் பாதியிலேயே வழுக்கி விழுந்தனர். சில இளைஞர்கள் கழுகு மரத்தில் ஏற முடியாமல் தத்தளித்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கம்பளியம்பட்டி அருகே பொத்தகணவாய்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுகுமர  உச்சியை அடைந்து பரிசுப் பொருட்களை அவிழ்த்தார். இந்நிகழ்ச்சியில் கம்புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்ப்பாடுகளை கம்பிளியம்பட்டி, கிராம பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.