திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய தினங்களில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து 2500 சிறப்பு பேருந்துகள் மூலம் 5326 நடைகள் இயக்கப்படவுள்ளது. விவரம் பின்வருமாறு:

   

வ.எண் தற்காலிக பேருந்து நிலையம் மார்க்கம்
1 காஞ்சி ரோடு டான் பாஸ்கோ பள்ளி- காஞ்சி , மேல்சோழங்குப்பம்
2 வேலூர் ரோடு-anna arch  வேலூர், போளூர் ,ஆரணி, ஆற்காடு,செய்யாறு
3 அவலூர்பேட்டை ரோடு srgds பள்ளி எதிரில்- சேத்துப்பட்டு,வந்தவாசி, காஞ்சிபுரம்
4 திண்டிவனம் ரோடு ஆறுமுகனார் நகர்- கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம்
`5 திண்டிவனம் ரோடு அன்பாலயா நகர் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி
6 வேட்டவலம் ரோடு  சர்வேயர் நகர்- வேட்டவலம், விழுப்புரம்
7 திருக்கோயிலூர் ரோடு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்- திருக்கோயிலூர் பண்ருட்டி,கடலூர்,சிதம்பரம், நாகப்பட்டினம்,
திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி
8

மணலூர்பேட்டை ரோடு

செந்தமிழ் நகர்- கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை, மணலூர்பேட்டை

9 செங்கம் ரோடு  அத்தியந்தல்- திருப்பத்தூர், சேலம் ,பெங்கர்,ஒசூர் ஈரோடு, கோயம்புத்தூர்

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதை அருகில் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு உதவும் வகையில் அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (வி) லிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.