எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் - தேரை இழுத்து துவக்கி வைத்த ஆட்சியர்
எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
Continues below advertisement

திருத்தேரோட்டம்
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழாவை முன்னிட்டு திருத் தேரோட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 26ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். கீழ வீதியில் துவங்கிய தேரினை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேராது 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. முக்கிய விழாவான சித்ரா பௌர்ணமியான நாளை பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ரத காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர். மேலும் இன்று அதிகாலை முதல் 24 மணிநேரமும் இடைவிடாத பால் அபிஷேகம் நடைபெறும். விழாவை யெட்டி தீயணைப்புத் துறையினர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
திருவண்ணாமலை கோயிலில் குரு பவுர்ணமி: கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு!
பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
திருவெண்காடு புதன் கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் மெய்சிலிர்க்க பக்தர்கள் வழிபாடு
Vallakottai murugan temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு! வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!
விழுப்புரம் அருகே 1200 வருட பழமையான லகுலீசர் சிற்பம் கண்டுபிடிப்பு! பல்லவர் கால அதிசயம்!
Continues below advertisement