திருச்சி அருகே அதவத்தூரில் ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பசாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு பெரிய பட்டியலால் குதிரை ஏறி வரும் நிகழ்வு, மற்றும் ஆட்டுத் தலையை ஈட்டியால் குத்தும் தலை குத்தி படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.




திருச்சி மாவட்டம், வயலூர் அருகே அதவத்தூரில்  பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற ஏகிரியம்மன், பனையடி கருப்பு சித்திரை பெருந்திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 18 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.


 




 


தினம்தோறும் ஏகிரியம்மன் பனையடி கருப்பசாமி சுவாமி உற்சவர்கள் மயில்,  குதிரை, சிங்கம், ரிஷபம், பூத, யானை வாகனங்களில் திருவீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து மே 4 ம் தேதி முதல் மே 8 தேதி வரை அதவத்தூர், பள்ளக்காடு, மேலப்பேட்டை, பாளையம், கொய்யாதோப்பு, தப்புகொட்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி உற்சவர் திருவீதி உலா, கிடா வெட்டு பூஜைகள் நடைபெற்றன.


சித்திரை பெருந்திருவிழாவின் 21ம் நாள் நிகழ்ச்சியாக கருவை அய்யனார், பனையடி கருப்பசாமி கோவிலில் பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் பெரிய பட்டையதார் குதிரை ஏறி அதவத்தூர், மேலபேட்டை வீதிகளில் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் படைசூழ ஊர்வலமாக வந்தனர்.


 




 


அதவத்தூர் சாவடி திடலில் இருந்து ஆட்டு தலையினை இளைஞர்கள் ஈட்டியால் குத்தும் தலை குத்தி படுகளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதவத்தூர் சவாடி சவாடி திடலில் துவங்கி மேலப்பேட்டை வரை சென்று மீண்டும் அதவத்தூர் சவாடி திடலில் பெரிய பட்டையதார் குதிரை ஏறி வரும் நிகழ்வு மற்றும் தலை குத்தி படுகளம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.


ராயனூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா.



கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது இன்னிலையில் சித்திரை மாத திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கரகம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி கிணற்றிலிருந்து பகவதி அம்மன் கரகத்தை மேல தாளங்கள் முழங்க ஆலயத்தின் பூசாரி தலையில் சுமந்தவாறு ஆலயம் வளம் வந்தார் அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பத்தி பரவசத்துடன் ஆடிப்பாடி உடன் வந்தனர் ஆலயம் வந்த பகவதி அம்மன் கரகத்திற்கு மகா தீபாவனை காட்டப்பட்டு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது சித்திரை மாத முதல் நாள் கரகம் ஆலயம் வரும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்