கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ விழா.


 




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் ,விபூதி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




 


அதை தொடர்ந்து நந்திபகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்தனர். பின்னர் சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி அதை தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.


பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாத வழங்கப்பட்டது. பின்னர் மேல தாளங்கள் முழங்க ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி அளித்தார். ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் சுவாமி ஆலயம் குடி புகுந்தார்.




 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத பிரதோஷ விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். பிரதோஷ விழாவை காண கரூர் மட்டும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 


கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆளவந்தீஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை நடைபெற்றது.


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான ஆருணவள்ளி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் குருபூஜை நடைபெற்றது முன்னதாக மூலவர் அம்பாளுக்கு மற்றும் திருநாவுக்கரசர் உற்சவருக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட உற்சவர் திருநாவுக்கரசருக்கு தீப ஆராதனை நடைபெற்று சுவாமி கோவில் பரிகாரம் வலம் வந்தது பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான சிவனடியார்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழுூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபலீஸ்வரர் கோயில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால் தயிர் பன்னீர் விகுதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.


அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலை மூன்று முறை வலம் வந்தார் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பாகவல்லி அம்பிகை சமேத மேகவளீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அதேபோல் குணம் சத்திரம் அருகே குன்னம் பகுதியில் உள்ள புன்னைவனார் உடனுறை புன்னைவன நாயகி கோயிலில் உள்ள நந்தியம் பெருமான் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயிலில் உள்ள நந்தியபெருமான் குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்ள நந்தியம்பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.