செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 

பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் (Padalathiri Narasimma Perumal Temple )


 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் - அனுமந்தபுரம் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. புண்ணியகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் வீதியுலா வந்து அருளினார்.



 

தொடர்ந்து 3ம் நாளான இன்று கருடசேவை உற்சவம் (Garuda Sevai) வெகு விமர்சையாக நடந்தது. கருடசேவை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மஞ்சள் நிற பட்டு உடுத்தி, வாசனை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

"கோவிந்தா கோவிந்தா "


இந்த நிகழ்வில் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்த்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி வீதி உலா வந்த பொழுது பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா " என முழக்கமிட்டு சாமியை வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இருக்கக்கூடிய உற்சவங்களில் பிரதான உற்சவமாக கருதப்படும் உற்சவம் கருட சேவை உற்சவம் என்பதால், வெளியூரில்  இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.

 




வைகாசி மாத பிரமோற்சவ விழா 2024 - Vaikasi Brahmotsavam 2024 


வைகாசி 03 தேதி (16 -05 -2024): காலை சேஷ வாகன உற்சவம் நடைபெறுகிறது. காலை வேளையில் தொடர்ந்து ஏகாந்த சேவை நடைபெறுகிறது.  பகல் வேளையில் விசேஷ  திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.


வைகாசி 04 தேதி ( 17 - 05 -2024 ): காலையில் நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவில் விழாவில் முக்கிய நிகழ்வான வான வேடிக்கை மற்றும்  யாளி வாகன உற்சவம் நடைபெறுகிறது.




வைகாசி 05 தேதி (18 - 05 -2024 ) :   காலை பிரம்மோற்சவ  விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான சொர்ண அபிஷேகம் விழா காலை நடைபெறுகிறது. இரவு வேளையில்  வானவேடிக்கையுடன்  யானை உற்சவம் நடைபெறுகிறது .


வைகாசி 06 தேதி ( 19 - 05 -2024 ) : வைகாசி பிரம்மோற்சவ விழாவில்,  தலைமை நிகழ்வாக கருதக்கூடிய திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  இன்றைய மாலை மண்டகப்படி நிகழ்வு நடைபெறுகிறது. இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


 


வைகாசி 07 தேதி ( 20 - 05 -2024 ) :   காலை பல்லாக்கு  உற்சவம்  இருந்து மாலை குதிரை வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.  இரவு புஷ்ப பள்ளியறை  ஜோடிக்கும் நடைபெற இருக்கிறது.


வைகாசி 08 தேதி ( 21 - 05 -2024 ) :  தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து தீர்த்தவாரி திருமஞ்சனம் நடைபெறுகிறது .  இரவு  புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடைபெறுகிறது.


வைகாசி 09 தேதி ( 22- 05 -2024 ) :  துவாதசாராதனம் திருமஞ்சனம் உற்சவம் நடைபெறுகிறது.


இதனைத் தொடர்ந்து மே மாதம்  23ம் தேதி முதல்  இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது