திருவிடந்தை-தெற்குப்பட்டு கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் நடந்த விழாவில் காந்தாரியிடம் துடைப்பம், முறத்தால் அடி வாங்கி இளைஞர்கள் சிதறி ஓடிய ருசிகர சம்பவம் சம்பவம் அரங்கேறியுள்ளது.


அக்னிவசந்த விழா


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்துள்ள திருவிடந்தை- தெற்குப்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் 100 ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் வருடந்தோறும் 22 நாட்கள் நடைபெறும் மகாபாரத அக்னி வசந்தவிழா நடைபெற்று வருவது வழக்கம். அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான துரியேதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு திரெளபதி கோயில் எதிரில் 30 அடி நீளத்திற்கு களிமண்ணால் துரியோதனன் மணல் சிற்பம் செய்யப்பட்டு இருந்தது. தெருக்கூத்து கலைஞர்கள் கிருஷ்ணர், துரோபதை, பீமன், அர்ச்சுணன், காந்தாரி வேடமிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடத்தினர்.


கூந்தல் முடிப்பு நிகழச்சி


பீமன் துரியோதனனை வதம் செய்தல், திரௌபதை (பாஞ்சாலி) கூந்தல் முடிப்பு நிகழச்சி முடிந்தவுடன் பீமன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர் கெதையால் துரியோதனன் தொடையில் அடித்து வதம் செய்வது போலவும், பின்னர் தனது சபதம் நிறைவேறியதால் திரௌபதை (பர்ங்சாலி) தனது கூந்தலை முடிச்சு போடும் நிகழவு முடிந்தவுடன், துரியோததன் தாய் சாபமிடும் நிகழ்வு நடந்தது.




அப்போது இளைஞர்கள் ஏணியில் சுமந்து கொண்டு வருகின்றனர். அப்போது ஏணியின் மீது அமர்ந்துள்ள காந்தாரியை  இளைஞர்கள் தூக்கி வந்தபோது தனது மகன் துரியோதனன் வதம் செய்ததற்கு சாபமிட்டு முரத்தாலும், துடைப்பத்தாலும் பக்தர்களுக்கு அடிவிழுந்தது.


சிதறி ஓடிய இளைஞர்கள்


அப்போது இளைஞர்கள் பலர் காந்தாரியிடம், துடைப்பத்தாலும், முறத்தாலும் அடி வாங்கி சிதறி ஓடினார்கள். இதில் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள், பெண்கள் பலர் துரௌபதை அம்மன் அருள் வேண்டி காந்தாரியிடம் முறைத்தில் காணிக்கை போட்டு (வேடமிட்ட தெருக்கூத்து கலைஞரிடம்) துடைப்பத்தால் அடி வாங்கி ஆசி பெற்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலர் தங்கள் தலையில் துடைப்பத்தால் அடி வாங்கி வினோதமான முறையில் ஆசி பெற்றனர்.




விழாவில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் துடைப்பத்தால் அடி வாங்கினர். துடைப்பத்தாலும், முறத்தாலும் அடி வாங்கினால் திரௌபதி அம்மன் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இந்த சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


வட தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா


பல்லவர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மகாபாரத கதைகள் நாடகமாக பிரசித்தி பெற்ற துவங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பல்லவர்கள் ஆண்ட தொண்டை நாட்டு பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற அக்னி வசந்த விழா, மகாபாரத பெருவிழா, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




தெருக்கூத்து கலைஞர்களும் இதுபோன்ற பாரத கூத்துகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற மகாபாரத தெருக்கூத்து திருவிழாக்கள் வடதமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் அதிகளவு நடத்தப்படுகின்றன. மகாபாரத தெருக்கூத்து பார்ப்பதற்கு அந்த கிராம மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்தில், உள்ள பல்வேறு கிராம மக்கள் குவிவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இறுதி நாளில் நடைபெறும் துரியோதனன் படுகளம், அக்னி வசந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது