கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சண்டிகேஸ்வரர் திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர்நாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் சிறப்பாக நிகழ்ச்சி தொடங்கியது.
நாள்தோறும் திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
பின்னர் சுவாமிக்கு வண்ண மாலைகள் அணிவித்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சண்டிகேஸ்வரர் திருவீதி உலா புறப்பட்டார். ஆலய முக்கிய வீதியில் வழியாக வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். ஆலயம் குடிபுகுந்த சண்டிகேஸ்வர சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டினார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சண்டிகேஸ்வரர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியங்களும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி பூஜை.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அரிசி மாவு ,கரும்புச்சாறு, இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட சிறப்பு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சங்கடகர சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி பூஜை சிறப்பு பொருட்களால் மூலவர் கணபதிக்கு அபிஷேகம்.
தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேகப்பொடி ,அரிசி மாவு, கரும்புச்சாறு, இளநீர், பன்னீர் மற்றும் விபூதியால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து மூலவர் கணபதிக்கு தங்க கவசம் அணிவித்தார்.
அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.