ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு கரூர் வழியாக நான்கு பக்தர்கள் சைக்கிள் மூலம் வேண்டுதலை நிறைவேற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Continues below advertisement


 


 




ஒவ்வொரு ஆண்டும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் லட்சக்கணக்கில் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக இதற்கு அவர்கள் ரயில், சுற்றுலா பஸ், வேன், கார் மூலமும் பயணம் மேற்கொள்கின்றனர்.


 




ஐயப்ப பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து விரதம் இருந்து வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு 1400 கிலோ மீட்டர் சைக்கிள் மூலம் நான்கு பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளனர்.


 




20 நாட்கள் நடைபெறும் இந்த பயணத்தில் நாள் ஒன்றுக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்கின்றனர். அரவக்குறிச்சி வழியாக சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கரூர் வந்த பக்தர்களை, அங்குள்ள பக்தர்கள் நலம்  வரவேற்று நலம் விசாரித்தனர்.