ஆயுத பூஜை என்பது இந்துக்கள் கொண்டாடும் திருவிழா. காலங்காலமாக இது பாரம்பரியமாக இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இது நவராத்திரி விழாவின் ஒரு பகுதி. ஆயுத பூஜைக்கான சுப நேரம் மற்றும் அதனைக் கொண்டாடும் முறையை அறிவோம்.


ஒன்பதாம் நாளான நவமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும். பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி மட்டுமில்லாமல், ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்டவையும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினம் நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம். 


ஆயுத பூஜையை எப்படி கொண்டாடுவது:


ஆயுத பூஜையன்று நம் தொழிலுக்கான கல்விக்கான ஆயுதங்களை அன்னையின் முன் வைக்க வேண்டும். மஞ்சள் மற்றும் சந்தனம் கலந்து அவற்றின் பொட்டு வைத்து அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் திலகமிடுவது அவசியம்.  துர்க்கை அன்னை முன் எல்லாவற்றையும் படைத்து பின்னர் பஜனைகள் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


ஆயுத பூஜையில் எந்த தேவிக்கு முக்கியத்துவம்?
ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.


ஆயுத பூஜை அன்று முக்கியமான நேரங்கள்
சூரிய உதயம் அக்டோபர் 4, 2022 6:23 AM
சூரிய அஸ்தமனம் அக்டோபர் 4 , 2022 6:07 PM
நவமி திதி தொடங்கும் நேரம் அக்டோபர் 03, 2022 4:38 PM
நவமி திதி முடியும் நேரம் அக்டோபர் 04, 2022 2:21 PM
சந்தி பூஜை முகூர்த்தம் அக்டோபர், 1:57 PM - அக்டோபர் 04, 2:45 PM


இவ்வாறாக இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை, துர்கா பூஜையாக மக்களால் கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான ,மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.


தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும், குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல், பக்தி சிரத்தையுடன் இருக்கிறார்கள். இதுவே வங்காளிகளுக்கு, துர்கா பூஜை கொண்டாட்டமானது, அசைவ உணவுகளை உள்ளடக்கிய நல்ல விருந்தாக இருக்கிறது. ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.