ஆருத்ரா தரிசனம் - ஆடல்வல்லான் சிதம்பரம் நடராஜரை காண குவிந்த பக்தர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான நடராஜர் உற்சவரராக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார்

Continues below advertisement

ஆருத்ரா தரிசன திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் காளை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான நடராஜர் உற்சவரராக பக்தர்களுக்கு காட்சியளிப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலின் தனி சிறப்பு.
 
இதனால் ஆருத்ரா தரிசனத்தைகான உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள், பொதுமக்கள் குவிவார்கள்.
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கடந்த 28ஆம் தேதி  துவங்கியது. நாள்தோறும் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. 
 
பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், நடராஜர்,சிவகாமசுந்தரி சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் தற்போது தொடங்கியுள்ளது நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரியுடன் நடராஜர் காட்சியளித்தார்.
 
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.  ஆருத்ரா தரிசனத்தை ஓட்டி சுமார் 1200க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயில் மற்றும் மாடவிதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola