நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் பூச்செரிதல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆனி மாத திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில் பூச்செரிதல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை, திருமாநிலையூர் மற்றும் ஆதி மாரியம்மன் குடித்தெரு உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு வண்ண பூக்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் சுவாமிகள் திருவீதி உலா மேள தாளங்கள் மற்றும் தாரத்தப்பட்டைகள் முழங்க நடைபெற்றது. அந்தந்த ஊரிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அந்தந்த பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சம்பங்கி, அரளி, துளசி, ரோஜா பூ, மல்லிகைப்பூ, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை தட்டில் சுமந்தவாறு முக்கிய வீதியில் வழியாக வளர்ந்த பிறகு ஆதி மாரியம்மன் ஆலயத்தில் உள்ள மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் முக்கிய வீதியில் வழியாக ஆதி மாரியம்மன் கோவில் பூச்செரிதல்விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை கிராமம், திருமாநிலையூர் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆதி மாரியம்மன் கோயிலை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்