சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஆடி மாத பிறப்பை அடுத்து உலக நன்மை வேண்டி நடைபெற்ற சிறப்பு மகா ருத்ர யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.


18 சித்தர்கள் அருள்பாலிக்கும் சித்தர் பீடம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.


Union Budget 2024: நெருங்கும் மத்திய பட்ஜெட் - நிதியமைச்சர் தொடர வேண்டியதும், மாற்ற வேண்டியதும் என்ன?




சிறப்பு மகா ருத்ர யாகம் 


இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், அது போன்று பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் ஆண்டு குருபூஜை விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆலயத்தில் உள்ள 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி பிரமாண்டமாக 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா ருத்ர யாகம் நடைபெற்றது.


WhatsApp: உங்கள் ஃபேவரைட் நபர்கள் யார்? லிஸ்ட்டை ரெடி பண்ணுங்க! வந்தது வாட்ஸ் அப் அப்டேட்




ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு 


பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா யாகத்தில் மயிலாடுதுறை மற்றும் இன்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.  


IBPS Clerk Recruitment 2024: டிகிரி தேர்ச்சி பெற்றவரா? வங்கி வேலை; இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிங்க!