காஞ்சிபுரம் கிராமணியினருக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழா மற்றும் 50-ம் ஆண்டு தீமிதி விழா வெகு விமருசையாக நடைபெற்றன.
அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில்
காஞ்சிபுரம் (KANCHIPURAM NEWS): ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் விசேஷத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஆடி மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் , ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி காந்தி சாலை ரங்கசாமி குளம் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியிருக்கும் கிராமணியினருக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆடித்திருவிழா மற்றும் 50-ம் ஆண்டு தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றன. ஸ்ரீ கன்னியம்மன் திருக்காலிமேடு குளக்கரையிலிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தபடி ஊர்வலமாக வந்து காந்தி சகலையில் உள்ள ஸ்ரீ கன்னியம்மன் கோவிலில் வந்தடைந்தனர்.
கூழ்வார்த்தல் விழா
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கன்னியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா தொடங்கி அம்மனுக்கு பொதுமக்கள் சிறப்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்து மகாதிபாரதனை காண்பித்து வழிபட்டு அருள் பெற்றனர். மேலும் ஸ்ரீ கன்னியம்மன் பூ அலங்காரத்தில் பிரம்மாண்ட தோற்றத்தில் எழுந்தருளி வீதி தோறும் பக்தர்களுக்கு காட்சியளித்தபடி ஊர்வலமாக வந்து பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அம்மன் வேடமிட்டு, தீச்சட்டி கையில் ஏந்தி
இதனைத் தொடர்ந்து கோவிலின் முன்பு அக்னிகுண்டம் வளர்த்து திரளான பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து மஞ்சள் ஆடை உடுத்தி அக்னி குண்டத்தில் இறங்கி பம்பை, உடுக்கை, அம்மன் வேடமிட்டு, தீச்சட்டி கையில் ஏந்தியவாறு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் விழா குழுவினர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு ஸ்ரீ கன்னியம்மன் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர் .நேற்று மூன்றாம் ஆடி வெள்ளி கிழமை என்பதால், காஞ்சிபுரத்தில் இதேபோன்று பல்வேறு அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்