உலகப் புகழ்பெற்ற அருள்மிகு கரூர் மாரியம்மன் திருவிழா வருகின்ற வைகாசி மாதம் சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா கம்பம் போடும் நிகழ்வுடன் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளதால் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஸ்வாமி பல்வேறு வாகனத்திலும் திருவீதி உலா காட்சி தருகிறார்.


 


 




 


இந்நிலையில் கரூர் மாவட்டம், கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 14.05.2023 முதல் 11.06.2023 வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31.05.2023 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே,  இந்நிகழ்வு நடைபெறவுள்ள 31.05.2023 புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உள்ளூர் விடுமுறை நாளான 31.05.2023 ஆனது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் (Under Negotiable Instrument Act 1881) அறிவிக்கப்படவில்லை, ஆதலால் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக 03.06.2023 (சனிக்கிழமை) அன்று அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது  என  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.


 




 


கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா வருகின்ற 14/05/2023 ஞாயிற்றுக்கிழமை காலை கம்பம் எடுத்து வரும் நிகழ்வு அன்று மாலை கம்பம் நடும் நிகழ்வும் நடைபெற உள்ளது அதை தொடர்ந்து 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை காப்பு கட்டுதலும், அதைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி விழா காட்சியளிக்கிறார். மேலும், 22.05.2023 திங்கட்கிழமை சுவாமி புலி வாகனத்திலும், 23.05.2023 செவ்வாய்க்கிழமை இரவு பூத வாகனத்திலும் சுவாமி திருவீதி விழா காட்சி தருகிறார். அதை தொடர்ந்து 24.05.2023 புதன்கிழமை இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும், 25.05.2023 வியாழக்கிழமை இரவு வெள்ளி அன்ன வாகனத்திலும், 26.05.2023 வெள்ளிக்கிழமை இரவு சேச வாகனத்திலும், சுவாமி திருவீதி விழா காட்சி தருகிறார்.


அதை தொடர்ந்து 27.05.2023 சனிக்கிழமை இரவு யானை வாகனத்திலும், 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி விழா காட்சி தருகிறார். மேலும் அன்று இரவு எதிர்காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நடைபெற உள்ளது. வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 29.05.2023 திங்கட்கிழமை காலை மாரியம்மன் திருத்தேரும் அன்று இரவு காமதேனும் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி தருகிறார். அதை தொடர்ந்து 30.05. 2023 செவ்வாய்க்கிழமை இரவு கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி திருவிதி விழா காட்சி தருகிறார். மேலும், 31.05.2023 அன்று மாரியம்மன் கரகம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும், சிறப்பாக நடைபெற உள்ளது. வைகாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊரில் இருந்து மாரியம்மன் திருவிழாவை காண வருகை தர இருப்பதால் ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர்.


 




 


மேலும் 15 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளதால் தற்போது அதன் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19.05.2023 வெள்ளிக்கிழமை இரவு கரூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பூச்செரிதல் வாகனம் வருகை தர உள்ளது ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் பூச்செரிதல் விழா இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளதாக பூச்செரிதல் விழா கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.