திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாலிலும் உள்ளன. இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகிலும் உள்ளன. இந்த 108 பெருமாள்களின் தரிசனத்தை ஒரே இடத்தில் காண திருச்சியில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 108 பெருமாள்களில் காண முடியாத 2 தலங்கள் வானுலகில் உள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் இதில் கலைமகள் நாச்சியார் பாடிய 51 பாசுரங்கள் இடம் பெற்றதாகும் மற்றும் பரமபதம் பரமபதநாதர் பெருமாள் ஆகும். இதில் பெரியபிராட்டியார் பாடிய 36 பாசுரங்கள் இடம் பெற்ற இடமாகும். இந்த பெருமாள்கள் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.


 






 




இதனை காண்பதற்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தரிசன நிகழ்ச்சியையொட்டி தினமும் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், சான்றோர்களின் சங்கீர்த்தன உபன்யாசம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 6.30 மணிக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வருகிற 9-ந்தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம், எஸ் டி.வி.நிறுவனம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று ஆன்மீக கண்காட்சி அமைக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.