Trekking For Beginners : புதுசா ட்ரெக்கிங் போறீங்களா? இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்க!
டிப்ஸ் 1 : ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு தேவையான ஒன்று உடை. மலை ஏறும்போதும், காடுகளில் பயணம் செய்யும் போதும் நம்மை முதலில் பாதுகாப்பது நம் உடைதான். ட்ரெக்கிங் ஜாக்கெட், கேப், ஷூ, சன் கிளாஸ் ஆகிய பொருட்கள் அணிந்திருப்பது அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிப்ஸ் 2 : ட்ரெக்கிங் செய்ய நினைப்பார்கள் ஒரு குரூப் ஆக செல்ல வேண்டும். தெரிந்தவர்களோடு செல்லும் போது வழி தவறி போவதை தவிர்க்க முடியும். அந்த குரூப்பின் தலைமையாளர் கூறுவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
டிப்ஸ் 3 : ட்ரெக்கிங்கில் கடைபிடிக்க வேண்டியது அமைதி. குறிப்பாக காடுகளில் ட்ரெக்கிங் செய்யும் போது சத்தம் எழுப்பினால் பறவைகள், விலங்குகளை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் குறையலாம். சில சமயம் அது ஆபத்திலும் முடியலாம்.
டிப்ஸ் 4 : மலையேறும் போது பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எடுத்து செல்வதை தவிர்க்கவும். மலைகளையும், காடுகளையும் முடிந்தவரை சுத்தமாக வைக்க வேண்டும். சிலர் காடுகளில் பிளாஸ்டிக் பைகளை போட்டு செல்கின்றனர் அது சட்டப்படி குற்றம்.
டிப்ஸ் 5 : ட்ரெக்கிங் என்பது நாம் நினைத்த உடன் செல்வது கிடையாது. முறையான பயிற்சி பெற்ற கைட் (Guide) அல்லது உள்ளூர் வாசிகளின் உதவியோடுதான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்து போய்விடலாம் அல்லது எங்காவது மாட்டிக் கொள்ள நேரிடலாம்.
டிப்ஸ் 6 : ட்ரெக்கிங் செல்வதற்கு உடல் வலிமை, மன வலிமை மிகவும் அவசியம். இது இரண்டும் இல்லாதவர்கள் கட்டாயம் ட்ரெக்கிங் செய்வதை தவிர்க்கவும். இல்லாவிட்டால் உயிர் இழப்பு கூட ஏற்படலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -