Trekking Tips : ட்ரெக்கிங் செய்வதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
மது அருந்துபவர்கள் கட்டாயம் ட்ரெக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் போதையில் பாதை மாறி சென்று விட நேரிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமூச்சு திணறல், மூட்டு வலி உள்ளவர்கள், சுவாச கோளாறு, இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் ட்ரெக்கிங் செய்யவே கூடாது.
ட்ரெக்கிங் செய்வதற்கான மெடிக்கல் கிட், ஷூ, ஜாக்கெட், ரோப், தண்ணீர் பாட்டில், போன்ற உபகரணங்கள் இல்லாமல் கட்டாயம் பயணம் செல்லக் கூடாது.
வயது முதிந்தவர்கள் ட்ரெக்கிங் செய்ய கூடாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ட்ரெக்கிங் முடித்துவிட்டு வந்த பிறகு பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
முறையான பயிற்சி இல்லாதவர்கள் ட்ரெக்கிங் செய்வதை கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் பயணத்தின் நடுவில் பல சவால்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு முறையான பயிற்சி கட்டாயம் வேண்டும்.
அதேபோல் தனியாகவும் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துக்குள் சிக்கி கொண்டால் காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -