Budget Trips : கையில் 6000 ரூபாய் இருந்தால் போதும்.. இங்கெல்லாம் ஜாலியாக ட்ரிப் போகலாம்!
பிரஞ்சு கலாச்சாரத்தின் அடையாளங்களை கொண்ட புதுச்சேரி, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இருக்கும். ஆரோவில்லுக்கு சென்று நன்றாக ரிலாக்ஸ் செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது ஏற்காடு. ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது. இங்கு சென்று வருவதற்கு ஐந்தாயிரத்திற்கும் குறைவாகதான் ஆகும்.
தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடி.பெரியார் தேசிய பூங்காவிற்கு சென்று யானைகள், புலிகள், மான்கள், காட்டு எருமைகளை நேரில் காணலாம்.
குட்டி கோவா என்று அழைக்கப்படும் வர்க்கலா கடற்கரை. கடற்கரை அருகில் உள்ள தாங்கும் விடுதிகளில் தங்க ஒரு நாளைக்கு, 500 முதல் 1000 ரூபாய் செலவாகும். முறையாக திட்டமிட்டால் பட்ஜெட்டில் சென்று வரலாம்.
கோடை வெயிலுக்கு இதமாக ஒரு ட்ரிப் செல்ல வேண்டும் என்றால் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு செல்லலாம். கண்களுக்கு எட்டிய தூரம் வரை இருக்கும் தேயிலை தோட்டமும், மலைக்காடுகளும் பார்ப்பவர்களை வசீகரிக்கும்.
சேலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள கொல்லிமலை. பசுமையான நிலப்பரப்பு, அதிகமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலையின் மீது செல்வதே சுவாரஸ்யமாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -