Summer Vacation : கோடை விடுமுறையை கழிக்க தென்னிந்தியாவின் சிறந்த இடங்கள்!
கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குமுளி .சுற்றுலா பயணிகள் பெரியார் புலிகள் காப்பகத்தை சுற்றிப் பார்க்கலாம், ஏரியில் படகு சவாரி செய்யலாம்,கேரளாவின் பாரம்பரிய உணவை ருசிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கர்நாடகாவில் அமைந்துள்ள கூர்க். இங்கு இருக்கும் காஃபி எஸ்டேட்டுகள், பசுமை போர்த்திய மலைகள் பார்ப்பவர்களை வசீகரிக்க வைக்கும்
நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள குன்னூர், பசுமையான மலை பரப்பாகும். இங்கு இருக்கும் தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள்,வியூ பாயிண்ட் சுற்றுலாவாசிகளை ஈர்க்கின்றன. அத்துடன் பல்வேறு வகையான பறவைகளை காணலாம்.
ஹம்பி நகரத்தில், பழங்கால கட்டிடங்களும், வரலாற்று கோயில்களும் அமைந்துள்ளது . இது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகின்றது.கோயில்கள், சிற்பங்கள், கோபுரங்கள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்
கேரளாவின் அழகான கிராமம் ஆழப்புழா. மனதை மயக்கக் கூடிய கிராம வாழ்க்கை,படகு வீட்டில் தங்குதல்,கால்வாயில் பயணம் செய்தல் போன்றவை சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.
பனி மூடிய பள்ளத்தாக்குகள், பசுமையான புல்வெளிகள், பைன் மரக்காடுகளால் சூழப்பட்ட கேரளாவில் உள்ள வேகமானில் பாரா க்ளைடிங், மலை ஏற்றம் போன்ற விஷயங்களையும் செய்யலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -