E - Pass Procedure : ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் விதிக்கப்பட்டது ஏன்?
கோடை வெயில் வந்தாலே பலரும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கும் ஊட்டியிலும், கொடைக்கானலிலும் குவிந்துவிடுவார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇனி அந்த இடங்களுக்கு அவ்வளவு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வெளியூர் மக்கள் படையெடுத்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் வாசிகள் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை உண்டாகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியில், சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் முறையை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இதனால், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் வருகின்றன மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை கட்டாயம் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் கொண்ட வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், உள்ளூர் வாசிகளுக்கு இது தேவை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -