Mini Thailand : இந்தியாவில் இருக்கும் மினி தாய்லாந்து பற்றி உங்களுக்கு தெரியுமா?
தாய்லாந்திற்கு நிகராக இந்தியாவில் ஒரு இடம் இருக்கிறது என்று நம்பமுடிகிறதா ? அப்படிப்பட்ட இடத்தை பற்றி தெரிதந்து கொள்ளலாம். பட்ஜெட்டில் தாய்லாந்து போக நினைப்பவர்கள், இங்கு செல்லலாம்.
உணவு, தெருவில் இருக்கும் கடைகள் முதல் ரிலாக்ஸ் செய்ய விடுதி வரை அனைத்தையும் பெற்றுள்ளது தாய்லாந்து. தேனிலவு செல்ல நினைப்பவர்கள் தாய்லாந்தை தேர்ந்தெடுப்பார்கள். இனிமே தாய்லாந்தை தவிர்த்து மினி தாய்லாந்து என்று அழைக்கப்படும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜிபிக்கு (JIBHI) செல்லுங்கள்.
தாய்லாந்தின் தீவுகளை நினைவு படுத்தும் வகையில் ஜிபியில் உள்ள நதிகள் இரண்டு பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து ஓடுகின்றன. அந்த இயற்கை காட்சியை பார்க்கும் போது தாய்லாந்து சென்ற உணர்வு கிடைக்கும் .
ஜிபியில் ஒரு அழகான நீர்விழ்ச்சியும் உள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அதை கண்டிருக்க மாட்டார்கள், ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அந்த நீர்வீழ்ச்சி அடர்த்த காடுகளுக்கு மத்தியில் உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றால் உள்ளூர் வாசிகளின் உதவி தேவைப்படும். காட்டுக்குள் நடந்து செல்வது திகிலான அனுபவத்தை அளிக்கும்.
ஜிபியில் உள்ள பழங்கால கோயில்கள் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்ய ஏற்ற இடமாக இருக்கும்.
ஜிபிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து ரயில்கள்,பேருந்துகள் மற்றும் தனியார் டாக்ஸியில் செல்லலாம். முறையாக திட்டமிட்டு சென்றால் நினைத்ததை விட செலவு மிச்சம் ஆகலாம்.