Tianmen Mountains : மெய்சிலிர்க்க வைக்கும் சொர்க்கத்தின் வாசல்.. இது எங்கு இருக்கு தெரியுமா?
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் ஜாங்ஜியாஜி அமைந்துள்ளது. இங்கு இருக்கும் தியான்மென் மலை சீனாவின் தேசிய பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மலையில் இயற்கையாக தோன்றி இருக்கும் ஆர்ச் பகுதியைதான் சொர்க்கத்தின் வாசல் என்று குறிப்பிடுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடல் மட்டத்தில் இருந்து 5,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இருக்கும் ஆர்ச் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த ஆர்ச்சிலிருந்து எட்டி பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரித்துவிடும். அந்த அளவிற்கு இயற்கையின் அழகு வசீகரமாக இருக்கும்.
2005 ஆம் ஆண்டிற்கு பின் இந்த மலைப் பகுதியில் கேபில் கார் அமைக்கப்பட்டது. கேபில் கார் மூலம் சுமார் 4000 அடி வரை சென்றடைய முடியும். அதனோடு மலைக்கு செல்ல சாலைகளும், மலையின் மீது கிளாஸ் ஸ்கைவாக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது
சொர்கத்தின் வாசல் என்று அழைக்கப்படும் முனைக்கு செல்வதற்கு 999 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டியிருக்கும். இந்த படிக்கட்டுகள் சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் என்று சீனா மக்கள் கூறுகின்றனர்.
சீனாவின் கணிதத்தின் படி எண் 9 அதிர்ஷ்டத்தை குறிக்கும் எண்ணாக நம்பப்படுகிறது. அதனால்தான் 999 படிகள் கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு கூறுகிறது.
999 படிக்கட்டுகள் இருந்தாலும், சொர்க்கத்தின் வாசலை பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வருடமும் வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -