Misty Meghamalai : ஊட்டி, கொடைக்கானல் விடுங்க..கம்மி பட்ஜெட்டில் சூப்பரான டூரிஸ்ட் ஸ்பாட் இதுதான்!
மேகமலையின் சிகரங்கள் மேகங்களால் சூழப்பட்டிருக்கும். நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான வானிலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகை மேகமலையில் காணமுடியும்.
மேகமலை வனவிலங்கு சரணாலயம் 63,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. யானைகள், புலி, சிறுத்தை, நீலகிரி தஹ்ர், கவுர், புள்ளிமான், சாம்பார் மான், காட்டுப்பன்றி போன்று பல வகையான வனவிலங்குகளை காணலாம். பறவை வகைகளையும், பல வித்தியாசமான தாவரங்களையும் கண்டு களிக்கலாம்
சுருளி அருவி மேகமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 190 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறது.
மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலார் என ஆறு அணைகள் உள்ளன.
மேகமலையின் மற்றொரு சிறப்பாக தேயிலை மற்றும் காஃபி தோட்டம் இருக்கிறது. பசுமையான தேயிலை செடிகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து உள்ளன.
மகாராஜா மெட்டு வியூ பாயின்ட் அணையிலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.மேகமலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் நின்றபடி ரசிக்கலாம்.