Tirupati: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா? ஒன்டே டிரிப் - இதைப் படிங்க!
திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிருப்பதி ஒரு நாள் சுற்றுலா பயண திட்டத்தின் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திலிருந்து தினசரி அதிகாலை 4.30 புறப்படும்.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி இருப்பார்.
சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படும்.
மதிய உணவும் வழங்கப்படும். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பேருந்து திரும்ப வரும். இதற்கு 7 நாள்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். சேவையை பெற விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -