Honeymoon Spots : புதுசா கல்யாணம் ஆனவரா நீங்கள்? இந்தியாவின் பெஸ்ட் ஹனிமூன் ஸ்பாட்ஸை தெரிஞ்சிக்கோங்க!
கோவா: இந்தியாவின் மக்கள் தொகை குறைவாக இருக்கும் நான்காவது சிறிய மாநிலம். கோவாவில் ஜெட்-ஸ்கையிங், பாராசெயிலிங், வாழைப்பழ படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர் சவாரி போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம். திருமணமானவர்கள் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.
லடாக் : ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள லடாக். பாங்காங் த்சோ ஏரி, டிசோ மோரிரி ஏரி, லே அரண்மனை, காந்த மலை, நுப்ரா பள்ளத்தாக்கு போன்ற இடங்கள் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இது வெயில் காலத்தில் ஹனிமூன் செல்ல சிறந்த இடமாகும்.
அந்தமான் நிக்கோபார் : இது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு பாரா செயிலிங் செய்வதற்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை ஆகலாம். அந்தமானிற்கு ஹனிமூன் செல்பவர்கள் நீல நிற வானத்தையும், தெளிவான கடலையும், கடல்வாழ் உயிரினங்களையும் காணலாம்.
ஆலப்புழா : இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் டாப் சுற்றுலா நகரங்களில் ஆலப்புழாவும் ஒன்று. ஹனிமூன் செல்ல நினைப்பவர்கள் பெரிய படகு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு நாள் முழுக்க அதில் தங்கலாம்.
மணாலி: இது இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோலங் பள்ளத்தாக்கில் உள்ள வியூ பாயிண்டில் நின்று மணாலியின் பனி மலை அழகை ரசிக்கலாம் மட்டும் பாரா செயிலிங் செய்யலாம். ஜோடியாக செல்பவர்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும்