✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Seanz Cruise : ECR இல் இனி நீங்க மிஸ் பண்ண கூடாத ஸ்பாட்..! பாக்கவே செமையா இருக்கே!

கிஷோர்   |  01 Jun 2024 10:40 AM (IST)
1

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகின்றது.

2

முட்டுக்காடு படகை இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மிதவை படகு உணவகம் அமைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார்.

3

தமிழகத்தின் முதல் மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) இதுவாகும். இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்படும். நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.

4

முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

5

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.

6

இந்தப் படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவைப் படகுகள், இயந்திரப் படகுகள், வேகமான இயந்திரப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

7

பொதுமக்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பணி முடிவுற்ற பிறகு மிதவை உணவு கப்பலில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் , சில வாரங்களில் நிறைவடையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

8

இந்த உணவகம் மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பட உள்ளது.  குழுவாக உணவு அருந்த விரும்புபவர்கள்,  நண்பர்களுடன் உணவு அருந்த விரும்புபவர்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், லைவ் பேண்ட் ( Live Band ) , இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உணவகத்தை பயன்படுத்தலாம் ‌

9

இரவு நேரத்தில் செயல்படும் உணவகம் என்பதால், கண்ணுக்கு இனிமையான மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • சுற்றுலா
  • Seanz Cruise : ECR இல் இனி நீங்க மிஸ் பண்ண கூடாத ஸ்பாட்..! பாக்கவே செமையா இருக்கே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.