ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம்..என்னென்ன அம்சங்கள் தெரியுமா...?
பிரபல சமூக வலைதளங்களுக்கான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாளுக்கு நாள் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி கொண்டே இருக்கின்றன.
அதிலும், குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய செயலி வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் என்றும், லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -