HBD Balu Mahendra : ‘கண்ணே கலைமானே..’ ஈடு இணை இல்லாத இயக்குநர் சிகரம் பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று!

பாலு மகேந்திரா
இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா.
சிவாஜியின் நீளமான வசனங்களும், எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகளும் கைதட்டல் வாங்கியிருந்த போது, அடுத்த தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான சினிமாவை அறிமுகப்படுத்தியவர் இவர்.
பாலுமகேந்திரா 5 மொழிகளில் மொத்தம் 23 படங்களை இயக்கினார். இவர் படங்களில் நிலவும் நிசப்தத்திற்கு இளையராஜாவின் இசை உயிர்கொடுத்தது.
ஆக்ஷன் படங்கள்தான் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டாகும் என்ற கருத்தினை உடைத்து, தனி நபர்களின் இடையில் நிலவும் உறவை அழகாக காட்டினார். பாலுவின் திரைக்கதை புரிந்து கொள்ள சிக்கலாக இருந்தாலும், அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள், பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த கால கட்டத்தில் முன்னணி இயக்குநர்களாக கொலோச்சி நிற்கும் வெற்றிமாற்றன், பாலா, ராம் ஆகியோரின் குருவாக சினிமா பாடத்தை கற்றுக்கொடுத்தவர் பாலு மகேந்திரா.
மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவரை பற்றிய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.