Pichaikaran 2 movie review : பில்லியனராக மாறும் பிச்சைக்காரன்... எப்படி இருக்கிறது பிச்சைக்காரன் 2? விமர்சனம் இதோ..
நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகக் கலைஞராகக் களமிறங்கியுள்ள விஜய் ஆண்டனி இயக்குநராக தன் முதல் படத்தில் ஜெயித்தாரா எனப் பார்க்கலாம்!
சிறு வயதில் பெற்றோரை இழந்து பிச்சை எடுத்து வாடும் விஜய் ஆண்டனி, சந்தர்ப்ப சூழலால் தன் தங்கையை இழந்து, ஜெயிலுக்குச் சென்று, திரும்பி தன் தங்கையைத் தேடிவருகிறார்.
மற்றொரு புறம் சந்தர்ப்ப சூழலால் நாட்டின் ஏழாவது பணக்காரனான கார்ப்பரேட் முதலாளியாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
பெரும் பில்லியனராக உருவெடுக்கும் விஜய் ஆண்டனி அதன் பின் எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன? அதன் விளைவுகள் என்ன? பிரிந்த தங்கையை விஜய் ஆண்டனி சந்தித்தாரா என்பது ’பிச்சைக்காரன் 2’ படத்தின் மீதிக்கதை.
மூளை மாற்று அறுவை சிகிச்சை எனும் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு சாத்தியமே இல்லாத மருத்துவத் தொழில்நுட்பத்தை மையமாகக் கண்டு கதை சொல்லியிருக்கிறார்கள்.
பில்லியனர், பிச்சைக்காரன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிகர் விஜய் ஆண்டனி நன்றாக பொருந்த முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது.
இமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி உள்ள விஜய் ஆண்டனி, தனது ஹீரோயினுக்கு பெரிதாக வேலை கொடுக்கவில்லை.
பின்னணி இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கவனமீர்க்கும் நிலையில் இயக்குநராக விஜய் ஆண்டனி பாஸாகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் திண்டாடும் திரைக்கதையை செம்மைப்படுத்தி இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்!