Laptop Charger : லேப்டாப்பில் சார்ஜர் போட்டுக்கொண்டே பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா?
லேப்டாப்பை சார்ஜ் போட்டு கொண்டே பயன்படுத்துகையில் மின்சார அளவு Fluctuate ஆகும் போது லேப்டாப் பேட்டரி பழுதாகிவிடலாம்
லேப்டாப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தும் போது (Integrated circuit) - டை பாதிக்கலாம். இதன் விளைவாக போர்டு (Board) பாதிக்கப்படலாம்.
ஒரு நாள் முழுக்க லேப்டாப்பை பயன்படுத்தும் நபர்கள் லேப்டாப்பை அடிக்கடி சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும் போது லேப்டாப் சரி செய்ய முடியாத அளவிற்கு முழுமையாக வீணாகிவிடலாம்.
மழை காலத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்து கொண்டே வேலை பார்க்கும் போது மின்சாரத்தில் தண்ணீர் பட்டால் லேப்டாப் வெடித்து விடலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தவிர்க்க 80 சதவீதம் சார்ஜ் ஆனதும் அந்த சார்ஜ் 20 சதவீத அளவுக்கு வரும் வரை பயன்படுத்த வேண்டும். லேப்டாப்பை பயன்படுத்தாத போது மீண்டும் சார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும்
அதேபோல் மழை காலத்திலும், நாள் முழுக்க சார்ஜ் செய்து கொண்டு லேப்டாப் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு செய்யும் போது லேப்டாப்பின் ஆயுட் காலம் நீடிக்கலாம்