Cinema Update : ஷாருக்கானுடன் இணைய உள்ள சமந்தா.. பாலிவுட்டில் ரஜினி.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
கடந்த மாதம் 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த கருடன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் கூடிய விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது
அட்லீ, ரஜினி மற்றும் சல்மான் கானுடன் புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
டோவினோ தாமஸ், பசில் ஜோசப், பார்வதி திருவொத்து, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க இருக்கும் மலையாள படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து இயக்கி வரும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் ரெடின் கிங்ஸ்லி இணைய உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி காம்போ டங்கி படத்தை தொடர்ந்து மீண்டும் இணையுள்ளதாகவும், இந்த படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.