Cauliflower Chicken Curry : சிக்கன் குழம்பில் காலிஃபிளவரா? இப்படி செய்து பாருங்க சுவை தூக்கலாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : 500 கிராம் எலும்பு இல்லாத கோழி , 1 வெங்காயம் , 200 கிராம் தக்காளி, 200 மில்லி தேங்காய் பால், 1 காலிஃபிளவர், 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சி, 4 பூண்டு, 1/4 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1 தேக்கரண்டி பிரவுன் சர்க்கரை, உப்பு தேவையான அளவு , கருப்பு மிளகு தூள், 1 டீஸ்பூன் எண்ணெய், கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை வறுத்து எடுத்து வைக்கவும்.
அதன் பிறகு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்தது மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து கிளறிவிடவும். அதன் பின் தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும் கிளறவும்.
அடுத்தது வெட்டி வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து கிளறவும். அதன் பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிய பின் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொதிப்பு வரும் வரை காத்திருக்கவும்.
குழம்பு கெட்டியாக இருத்தல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான காலிஃபிளவர் சிக்கன் கறி தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -