Elon Musk : ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நீங்குகிறாரா மஸ்க்?
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதத்தில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதிவியேற்றார்.
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் மஸ்க், இதன் பின் அதிரடியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் கொண்ட பயனாளர்கள், அதற்காக மாதமாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நிபந்தனையை முன்வைத்தார்.
சில நாட்களுக்கு முன்பு, பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. பின், 1 மில்லியன் பாலோவர்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ டிக் மீண்டும் கொடுக்கப்பட்டது.
ட்விட்டரில் எலான் மஸ் பதிவிட்ட சமீபத்திய ட்வீட் தொழில்நுட்ப துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தான் 6 வாரத்திற்குள் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து நீங்கி அந்நிறுவனத்தின் செயல் தலைவராகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் செயல்படவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார் மஸ்க். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை எற்றுக்கொள்ளும் புதிய நபர் குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், பெண் ஒருவர் அப்பொருப்பை ஏற்கவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.