Farhana Movie Review : சர்ச்சையை கிளப்பியுள்ளதா ஃபர்ஹானா? எப்படி இருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு? குட்டி விமர்சனம் உள்ளே!
கட்டுகோப்பான இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனது குடும்ப கஷ்டத்தால் வீட்டினரை சமாளித்து வேலைக்கு செல்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃப்ரெண்ட்ஷிப் கால் எனப்படும் நட்புலகம் கால் சேவையில் வேலை செய்யும் ஃபர்ஹானுக்கு தொடர்ந்து கால் செய்வதால், இருவருக்கும் இடையில் நல்ல பிணைப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் போனில் பேசிய நபரை ஃபர்ஹானா நேரில் சந்தித்தாரா? கணவர், குடும்பம் என பலகட்ட சிக்கல்களை தாண்டி வேலைக்கு வந்த ஃபர்ஹானாவின் நிலை என்ன? என்பதை சுவாரஸ்யம் கூட்டி சன்பென்ஸ் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
ஹை வோல்டேஜ் பர்ஃபாமன்ஸ் கொடுத்து கம் பேக் தந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.சந்தேகங்கள் தாண்டி மனைவிக்கு பக்கபலமாக நிற்பது என வெகு நாட்களுக்குப் பிறகு கவனம் ஈர்த்து ஸ்கோர் செய்துள்ளார்.
கட்டுக்கோப்பான அப்பாவாக கிட்டு, ஃப்ரி ஸ்பிரிட் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா, தோழிக்கு ஆறுதல் கூறும் அனுமோல் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர்.
இஸ்லாமிய பின்னணி என்றாலே சர்சசை எனும் முள் மேல் நடப்பது போன்ற சூழலில், வேலைக்குச் செல்லும் இஸ்லாமிய பெண்ணை சுற்றிய கமர்ஷியல் கதையை முதிர்ச்சியாக கையாண்டு, முத்திரை பதித்திருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனுக்கு வாழ்த்துகள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -