Summer Movie Releases : ராவண கோட்டம் முதல் கஸ்டடி வரை..இந்த வாரத்தில் ரிலீஸான படங்கள்!
இந்த வாரத்தில் சாந்தனு நடித்த இராவண கோட்டம், மணிகண்டனின் குட்-நைட், நாக சைதன்யாவின் கஸ்டடி, ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாந்தனு, பிரபு மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நேரும் கலவரம், அதிலேயே காதல், நட்பு, குடும்பம் மற்றும் துரோகம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இராவண கோட்டம் உருவாகியுள்ளது.
வெங்கட் பிரபு முதன்முறையாக இயக்கியுள்ள தெலுங்கு திரைப்படம் தான் கஸ்டடி. இதில் நாக சைதன்யா காவலராகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். அரவிந்த் சாமி மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
அம்மா, அக்கா, மாமா மற்றும் தங்கை என ஒரு சரியான நடுத்தர குடும்பத்தில் வாழும் நபராக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் - நைட். குறட்டை பிரச்னையை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர் எதிர்கொள்ளும் சூழல் ஆகியவற்றை நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப படமாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வேற்றுகிரக வாசிகள் போலவும் சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமான ஃபர்ஹானா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
இந்த வாரம் வெளியான நான்கு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஃபர்ஹானா படமும் குட் நைட் படமும் எதிர்பார்ப்புகளை தாண்டிய விமர்சனங்களை பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -