FIDE World Chess Cup : உலக செஸ் சாம்பியன் பட்டம் யாருக்கு சொந்தமாகும்? நேற்று போல் இன்றும் சாதனை படைக்குமா இந்தியா?
அஜர்பைஜான் பகுதி நகரில் நடைபெற்று வரும் ஃபிடே உலக சாம்பியன் செஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார் சென்னை வீரர் பிரக்ஞானந்தா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நேர்ந்தது . கார்ல்சன் நார்வே நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
நேற்று முன்தினம் நடந்த முதல் கிளாசிக் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, 2வது கிளாசிக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பான இந்த போட்டி 30 நகர்த்தல்களுக்கு பிறகு டிராவில் முடிந்தது
இரண்டு கிளாசிக் ஆட்டங்களும் டிரா ஆன பின், உலக செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இரு வீரர்களும் இன்று ரேபிட் முறையில் டை பிரேக்கர் ஆட்டத்தில் மோத உள்ளனர்.
நேற்று நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த ரோவரின் பெயர் பிரக்யான். வரலாறு படைத்து நிலவில் உலா வரும் பிரக்யான் போல், உலக சாம்பியன் செஸ் இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா வென்று சாதிப்பார் என்பது இந்திய மக்களின் ஆசையாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -