Chandrayaan 3 Success : உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியா.. வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. ( Photo Credit : ISRO)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதேபோல் சந்திரயான் 3 திட்டத்தின், இயக்குனராகவும், முக்கிய மூளையாகவும் இருந்து செயல்பட்டவர் தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் எனும் ஆராய்ச்சியாளர் தான்.
இன்று காலை சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் லேண்டர் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது. ( Photo Credit : ISRO)
இன்று மாலை சரியாக 5.44 மணியில் இருந்து விக்ரம் லேண்டரை தரையிறக்க பணி தீவிரமாக நடைபெற்றது. கிட்டதட்ட 6.03 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.
இந்த வரலாற்று மிக்க நிகழ்வில் பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி மூலம் இஸ்ரோ செயலகத்துடன் இணைந்து உறையாற்றினார் இதில் அவர் கூறுகையில், “சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்
இந்த வெற்றி நிகழ்வை சுமார் 75 லட்சம் மக்கள் இஸ்ரோ இணையதளத்தில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்
இதையடுத்து இஸ்ரோ தலைமையகத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் உற்சாகமாய் கைத்தட்டினர்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் இருந்து காணொலி வாயிலாக இவ்வரலாற்று மிக்க நிகழ்வை இருந்து கண்டுகளித்துள்ளனர். ( Photo Credits : BCCI)
இஸ்ரோவின் சாதனைக்கு பல்வேறு திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -