IND vs IRE : இளம் வீரர்களை களத்தில் இறக்கி தொடரை கைப்பற்றிய இந்தியா!
இந்தியா -அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று அறிவிக்க பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆயர்லாந்து அணியை இந்தியா வீழ்த்தியது.
மூன்றாவது டி20 போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அயர்லாந்து அணி தயாரான நிலையில் மழை மீண்டும் குறிக்கிட்டது.
இதனால் போட்டி ரத்து செய்யப்பட்ட பின்னர் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
போட்டி நடக்காததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் காட்சியை தொலைகாட்சியில் கண்டுகழித்தனர்.
பின்னர் கோப்பையை பெற்ற கேப்டன் பும்ரா, அதை இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கொடுத்து வெற்றியை கொண்டாடினர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -