Bhavani Devi Photos : போராட்டம் இருந்தால்தான், வெற்றியை ரசிக்க முடியும்- பவானி தேவியின் சாதனை..!
பவானி மிகப்பெரிய விளையாட்டுக் கலாச்சார பின்புலம் கொண்ட வீட்டில் பிறக்கவில்லை. நான்கு உடன்பிறப்புகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் தீவிரமாக விளையாட்டில் ஆர்வம் கொண்டதில்லை.
1993-ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மதபோதகர், தாய் இல்லத்தரசி.
இவர் சென்னையில் உள்ள முருகா தனுஷ்கோடி பள்ளியில் பள்ளிப்படிப்பை கற்றார். விளையாட்டு மட்டுமே பள்ளிப் பாடங்கள் ஏற்படுத்திய கடுமையான சூழல் இருந்து தப்பிப்பதற்காகன ஒரே வழியாக அவருக்கு இருந்தது.
இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் வாள்சண்டை போட்டிக்கு முதன்முதலாக தேர்வாகிய பவானிதேவி, தனது முதல்சுற்றில் 15 - 3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இருப்பினும், இரண்டாவது சுற்றில், உலகின் மூன்றாவது வாள் சண்டை வீரரான Brunet என்பவரிடம் தோல்வியைத் தழுவினார்
2016 -2017 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வாள்சண்டைப் பட்டியலில் 36-வது இடத்தைப் பெற்றவர் இவர். முதல் 50 இடங்களுக்குள் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு சேரும்.
ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை தீர்க்கமாக போராடிய அவர்,வாள் சண்டையில் ஓவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளார்.