Kargil Diwas | 'தாய்மண்ணே வணக்கம்...' : கார்கில் போரின் 22-வது நினைவு தினம்..!
கார்கில் போரின் 22வது நினைவு தினம் இன்று
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகார்கில் போர் 1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தது
கார்கில் நகருக்கு அருகில் அமைந்துள்ள டைகர் மலையில் இந்த போர் நடைபெற்றது
பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி முஷரப்பிற்கும், அப்போதைய அந்த நாட்டின் தலைமை தளபதிக்கும் நடைபெற்ற உரையாடலை இடைமறித்து பாகிஸ்தான் இந்த போரில் ஈடுபட்டிருப்பதை இந்தியா கண்டுபிடித்தது
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் மும்முனை தாக்குதலை நடத்தினர்
கார்கிலில் இருந்து படைகளை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை அறிவுறுத்தினார்
கார்கில் போரில் மைனஸ் டிகிரி குளிரில் இந்திய வீரர்கள் நாட்டுக்காக போரிட்டனர்
கார்கிலை மீட்பதற்காக நடத்தப்பட்ட இந்த போருக்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிடப்பட்டது.
இந்த போரில் இந்திய வீரர்கள் மிகுந்த தீரத்துடனும், விவேகத்துடனும் செயல்பட்டனர்.
இந்திய ராணுவம் திரஸ், படாலிக், டைகர் மலை ஆகியவற்றை முழுமையாக கைப்பற்றியது
அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் சந்திப்பிற்கு பிறகு, படைகளை வாபஸ் பெறுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்
1999ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாயி அறிவித்தார்.
1999ம் ஆண்டு ஜூலை 26ம் நாள் இந்த போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது
இந்த போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு கார்கில் நினைவிடம் உருவாக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -