Nethra Kumanan:பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் நேத்ரா குமணன்!

14 வயதில் பாய்மர படகுப் பயிற்சி எடுத்த இளம் பெண் இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு ஒலிம்பிக்கில் சாதிக்க இருப்பவர் தான் நேத்ரா குமணன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2011 ஆம் ஆண்டு அப்பா ஆசைக்காக பாய்மர படகு பயிற்சில் நேத்ரா சேர்த்துள்ளார். அதன் பிறகு சிறுவயதில் இருந்தே பாய்மர படகுப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

2014 மற்றும் 2018 ஆசிய விளையாட்டு விளையாட்டு போட்டிகளில் இந்திய சார்பாக கலந்து கொண்டு , 7வது மற்றும் 4வது இடத்தை பிடித்தார்.
டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவலால் 2021 தள்ளி வைக்கப்பட்டது. 2021 -ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்ற நேத்ராவிற்கு தயக்கமும், பதட்டமும் இருந்தது.
2020 ஆம் ஆண்டு ஜப்பானின் அதன் பிறகு பாய்மரப் படகுப் போட்டிகளுக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவில் ஐரோப்பிய அகாடமியில் சேர்த்து தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.
இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் நேத்ரா. இந்த முறை கண்டிப்பாக பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உடன் கூறியுள்ளார் நேத்ரா குமணன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -