Dragon Fruit : டிராகன் பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!
டிராகன் பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appட்ராகன் பழத்தை தவறாமல் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நீரிழிவு பிரச்சினைகளை எதிர்த்து செயல்படவும் வழிசெய்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
பழத்தின் நார்ச்சத்து மற்றும் ஒலிகோசாக்கரைடுகள் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவித்து, சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
சிவப்பு டிராகன் பழத்தில் லைகோபீன் உள்ளது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி இதயத்தை பாதுகாத்து சில புற்று நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.
ஊதா நிற டிராகன் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, சருமத்திற்கு பளபளப்பு தன்மையை அளிக்கிறது.
டிராகன் பழத்தை ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து ஜூஸ் ஆகவோ, மில்க் ஷேக் ஆகவோ தினமும் குடித்து வந்தால் முடி நன்றாக வளரலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -