✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Asian Games 2023 : உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நேபாள அணி!

ABP NADU   |  27 Sep 2023 05:26 PM (IST)
1

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. அட்டவணை பட்டியலில் இடம்பெற்றுள்ள டி20 போட்டியில் நேபாளம் மற்றும் மங்கோலியா அணிகள் நேற்று மோதின.

2

இதில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய நேபாள அணியின் தொடக்க வீரர்களான குஷல்(19) மற்றும் ஆஷிப்(16) ரன்களில் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

3

பின்னர் களத்திற்கு வந்த குஷல் மல்லா மங்கோலிய பந்து வீச்சாளர்களை அணு அணுவாக பிரித்து மேய்ந்து 34 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த மல்லா 137 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

4

இதனை அடுத்து களத்தில் இறங்கிய திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 12 பந்திகளில் அரைசதம் விலாசியதே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5

யுவராஜ் சிங் சாதனையை 9 பந்துகளிலேயே முறியடித்தார் திபேந்திர சிங். தொடர்ந்து ஆடிய நேபாள அணி 20 ஓவர் முடிவில் 314 ரன்களை குவித்தது.

6

டி20 போட்டியில் உலக அளவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் படைத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய மங்கோலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்கள். 13.1 ஓவர்கள் விளையாடிய மங்கோலிய அணி 41-க்கு சுருண்டது. உலக அளவில் டி20 போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையை படைத்துள்ளது மங்கோலியே கிரிக்கெட் அணி.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Asian Games 2023 : உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த நேபாள அணி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.