மதுரையில் திறக்கப்பட்டது சர்வதேச ஹாக்கி மைதானம்.. துணை முதலமைச்சர் உற்சாகம் !
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன.
இம்மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி என மொத்தம் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் மொத்தம் 72 சர்வதேச போட்டிகள் நடைபெறுகிறது.
உலக கோப்பை 14-வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
மதுரையில் நவம்பர் 28 ல் உலகக் கோப்பைக்கான முதல் போட்டி ஜெர்மனி - ரஷ்யா இடையே கோலாகலமாக தொடங்கவுள்ளது.
image 10