MS Dhoni : 'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்...' - முழங்கால் காயத்துடன் ஐ.பி.எல் விளையாடிய தல தோனி !
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த வெற்றியின் மூலம் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் 41 வயதான தோனி முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அவதிப்பட்டு வந்தார்
இதுகுறித்து பேசிய சென்னை அணி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வருவது உண்மைதான். அவரது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்
இதையடுத்து, எம்.எஸ். தோனி போட்டியின்போதோ அல்லது பயிற்சியின்போதோ நொண்டியடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தியது
இந்த நிலையில், எம்.எஸ்தோனி இந்த வாரம் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவனையில் அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது முழங்கால் காயத்தின் அளவை சரிபார்க்க சோதனைகள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -